Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

காபி மிகவும் புடிக்குதுன்னா அவசியம் ஒரு முறை இது மாதிரி காபி மில்க் ஷேக் செய்து பாருங்க!

Published :
-விளம்பரம்-

Coffee Milk Shake Recipe In Tamil : ஒரு சிலருக்கு காலையில் எழுந்ததும் டீ, காபி மற்றும் பால் குடிச்சா தான் அந்த நாள் ஸ்டார்ட் ஆகும். இதுல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்னு பிடிக்கும். ஒரு சிலருக்கு டீ பிடிக்கும் ஒரு சிலருக்கு பால் பிடிக்கும் ஒரு சிலருக்கு காபி பிடிக்கும். ஒரு சிலர் இந்த டீ குடிப்பதையே கலையா நினைப்பாங்க. டீக்கடைக்கு சென்று அங்கு நின்னு நண்பர்களோடு டீ, காபி, பால் குடிக்கிறப்போ ஜாலியா அரட்டை அடிச்சுக்கிட்டு குடிச்சா அதுவும் ஒரு தனி மகிழ்ச்சியாக இருக்கும்.

Coffee Milk Shake Recipe In Tamil
Coffee Milk Shake Recipe In Tamil

ஒரு சிலர் சாப்பிடாமல் கூட இருந்திருவாங்க ஆனா இந்த டீ, காபி குடிக்காம இருக்கவே மாட்டாங்க. ஒரு நாளைக்கு 10, பதினைந்து டீ, காபி குடிப்பவர்கள் உள்ளனர் அவங்களுக்கு டீ, காபி குடிக்கிறது அவ்வளவு பிடிக்கும். பெரியவங்க முதல் குழந்தைகள் வரை எல்லாருக்குமே டீ, காபி என்றால் ரொம்பவே பிடிக்கும். நீங்க காபி விரும்பி குடிக்கிறீங்களா அப்போ காபி கொண்டு செய்யும் ஒரு அருமையான மில்க் ஷேக் ஒரு முறை செஞ்சு குடிச்சு பாருங்க காபி விரும்புபவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.

Coffee Milk Shake Recipe In Tamil

ஒரு சிலருக்கு அந்த காபி தூளின் வாசனையே ரொம்பவும் பிடிக்கும் அந்த போல காபி பவுடர் வாசம் பிடிக்கிறவங்களுக்கு இந்த காபி மில்க் ஷேக்கானது மிகவும் பிடிக்கும் இப்போ வெயில் காலம் வந்துள்ளது. உங்களுக்கு புடிச்ச காபியை வைத்து ஜில்லுனு மில்க் ஷேக் செய்து வீட்டிலேயே குடிச்சு பாருங்க செம்மையா இருக்கும்.

இந்த காபி மில்க் ஷேக் நீங்க காலையிலேயேதயார் செய்து ஏதாவது ஒரு டப்பாவில் வைத்து ஆபீஸ், பள்ளி, காலேஜ்க்கு கொண்டு செல்லலாம் உங்களுக்கு எப்ப எல்லாம் காபி குடிக்க தோணுதோ அப்போ இந்த காபி மில்க் ஷேக் நீங்கள் குடிச்சுக்கலாம் டேஸ்டும் ரொம்ப அருமையா இருக்கும். இந்த சூப்பரான காபி மில்க் ஷேக் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

இதையும் படிங்க : உங்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படின்னா இந்த 3 பொருட்கள் பயன்படுத்தி பானத்தை குடிங்க.!

Equipment

1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கொட்டை இல்லாத பேரிச்சம்பழம்
  • 8 டீஸ்பூன் காபி பவுடர்
  • 5 கப் பால்
  • 3 ஏலக்காய்
  • 3 டீஸ்பூன் சர்க்கரை
  • 3/4 கப் பிரஸ் கிரீம்
  • ஐஸ் கட்டிகள் சர்க்கரை
  • 3/4 அளவு

செய்முறை

  • பேரிச்சம் பழங்களின் கொட்டையினை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி அதில் காபி தூளை போட்டு கலக்கவும்
  • பின்பு அதனுடன் சர்க்கரை மற்றும் ஏலக்காயை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்
  • சர்க்கரை நன்றாக கரைந்ததும் அதனை தனியாக எடுத்து வைத்து நன்கு ஆற வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு பேரிச்சம் பழத்துடன் பால் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும் அதனுடன் கலந்து வைத்திருக்கும் காபி டிகாஷன் ஐஸ் கட்டிகள் பிரஷ் கிரீம் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
  • அரைத்ததும் அதை எடுத்து உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கப்பில் ஊற்றி அதன் மேலே சிறிதளவு காபி தூள் தூவி பரிமாறினால் ருசியான காபி மில்க் ஷேக் ரெடி

Nutrition for Coffee Milk Shake Recipe In Tamil

Serving: 500g | Calories: 99.93kcal | Carbohydrates: 13.91g | Protein: 3.49g | Sodium: 54.88mg | Potassium: 77.95mg | Calcium: 24.71mg | Iron: 0.21mg

இதையும் படிங்க : தேங்காய், தக்காளி சேர்க்காமல் மதுரை நீர் சட்னி செய்வது எப்படி? 2 இட்லி கூடுதலாக சாப்பிடுவாங்க..!

-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்