Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

கார்ன் ஃப்ரை செய்வது எப்படி..?

Published :
-விளம்பரம்-

corn fry recipe : பொதுவாக நாம் பலவிதமான மாலை நேர சிற்றுண்டிகளை செய்து சாப்பிட்டிருப்போம். அதில் சில வகையான சிற்றுண்டிகள் நமக்கு சாப்பிட அலுத்தே போயிருக்கலாம். ஆகவே, நாம் இங்கு ஒரு வித்தியாசமான கார்ன் ஃப்ரை என்கிற மாலை நேர சிற்றுண்டியை பார்க்க போகிறோம். நாம் வழக்கமாக செய்து சாப்பிடும் மாலை நேர சிற்றுண்டிக்கு இது ஒரு அருமையான ஒன்று.

corn fry recipe in tamil
corn fry recipe in tamil

கார்ன் ஃப்ரையின் சிறப்பு என்னவென்றால் இதை நாம் வெறும் சோள விதைகள், சோள மாவு, மற்றும் அரிசி மாவை கொண்டே செய்து விடலாம். அது மட்டுமின்றி இதை செய்வதற்கும் மிகவும் எளிமையானது. மேலும் இதை செய்வதற்கும் அதிக நேரம் ஆகாது. நம் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் போது நாம் அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியாகஇதை செய்து கொடுத்தால் அதை அவர்கள் மிகவும் விரும்பிசாப்பிடுவர்கள்.

இப்பொழுது கீழே கார்ன் ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள் மற்றும் எளிதான செய்முறையினை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • 2 கப் – சோள விதைகள்
  • 4 டீ ஸ்பூன் – சோள மாவு
  • 1 கப் – மயோனைஸ்
  • 4 டீ ஸ்பூன் – அரிசி மாவு
  • 1 சிட்டிகை – மிளகு தூள்
  • 3 டீ ஸ்பூன் – ஸ்செஷ்வான் சாஸ்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • ஸ்பிரிங் ஆனியன் – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை: corn fry recipe

முதலில் சோள விதைகளை தனியாக எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து பின்பு ஸ்ப்ரிங் வெங்காயத்தை நறுக்கி அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் மிதமான சூட்டில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சோள விதைகளை வேக வைப்பதற்கு அதை சுட வைக்கவும்.
தண்ணீர் சுட்ட பின் அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பை போட்டு, நாம் எடுத்து வைத்துள்ள சோள விதைகளை போட்டு அதை சுமார் 2 நிமிடம் நேரம் வரை வேக விடவும்.

2 நிமிடம் கழித்து அதிலிருக்கும் தண்ணீரை நன்கு வடித்து சோள விதைகளை ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு அதை கொஞ்ச நேரம் ஆற வைக்கவும்.
சோள விதைகள் சூடு ஆறியதும் அதை ஒருகிண்ணத்தில் போட்டு அதில் மிளகு தூள் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
பின்பு அதில் சோள மாவு மற்றும் அரிசி மாவை சேர்த்து அதை நன்கு கலக்கவும். பிறகு அதில் ஒரு டீ ஸ்பூன் அளவு தண்ணீர் ஊற்றி அதை மீண்டும் நன்கு கிளற வேண்டும்.

பிறகு அதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். அதை சுமார் 20 அல்லது 25 நிமிடம் வரை ஃப்ரிட்ஜில் இருக்க விடவும். பிறகு, ஒரு bowl லை எடுத்து அதில் ஒரு கப் அளவு மயோனைஸ் மற்றும் ஸ்செஷ்வான் சாஸை ஊற்றி அதை நன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சோள விதைகளை போட்டு பொரிக்க, எண்ணையினை தேவையான அளவு ஊற்றி அதை சுட வைக்கவும். எண்ணெய் சுட்டதும், அடுப்பை ஏற்றி வைத்து அதில் நாம் ஃப்ரிட்ஜில் வைத்துள்ள சோள விதையை எடுத்து வாணலின் அளவிற்கேற்ப பக்குவமாக போட்டு அது பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும். (நம் உடல் மீது எண்ணெய் தெறிக்காமல் பாதுகாப்பாக பார்த்து கொள்ளவும்.)

அது நன்கு பொன்னிறமான பிறகு அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்றாக வடிகட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
இவ்வாறு மீதமுள்ள சோள விதைகளை எண்ணெய்யில் போட்டு பக்குவமாக பொரித்தெடுக்கவும்.

அனைத்து சோள விதைகளையும் பொரித்தெடுத்து தட்டில் வைத்த பிறகு அதில் நாம் செய்து வைத்துள்ள மயோனைஸ் மற்றும் ஸ்செஷ்வான் சாஸை மேலே ஊற்றி சிறிதளவு ஸ்பிரிங் வெங்காயத்தை தூவி அதை சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்களுக்கு சூடான மற்றும் மொறு மொறுப்பான கார்ன் ஃப்ரை ரெடி. இதை உங்கள் வீட்டில் செய்து உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Read Also : தித்திப்பான சேமியா பாயசம் செய்வது எப்படி?

-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்