Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

இறால் வறுவல் எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்த முறை இப்படி செய்து பாருங்க விரும்பி சாப்பிடுவார்கள்!

Published :
-விளம்பரம்-

Eral Varuval : கடல் உணவுகளில் இறால், நண்டு, கணவாய், சிப்பி அப்படின்னு நிறைய அசைவ உணவுகள் கிடைச்சாலும் விதவிதமாக மீன்கள் நிறைய கிடைச்சாலும், நமக்கு இறால் மிகவும் பிடிக்கும். இறால் பார்ப்பதற்கு நிறைய இருப்பது போல் இருக்கும் ஆனால் சுத்தம் செய்து பார்த்தால் ரொம்பவும் கடுப்பாகவே இருக்கும். ஆனால் சுவையானது மிகவும் அதிகமாக இருக்கும்.

அந்த இறாலை கொண்டு பிரியாணி கிரேவி வறுவல், மிளகு இறால் பலவகையான வகைகள் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனா, ஹோட்டலில் கிடைக்கிறது போல் நாம் இறால் வறுவலை செய்து சாப்பிட்டிருக்க மாட்டோம்.

நம் வீட்டில் இறால் வறுவலை ஈஸியாவும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு கொஞ்சம் பொருட்கள் தான் வேண்டும். தோசை, இட்லி,சாதம்,பிரியானிகள் இவை எல்லாவற்றிக்கும் சைடிஷாக போட்டு சாப்பிட்டால் அருமையாகவும் சுவையாகவும் இருக்கும். அந்த அளவிற்கு சுவையாக இறால் வறுவல் செய்வது எப்படி என்று இந்தப்பதிவில் பார்க்கலாம் .

Eral Varuval
Eral Varuval

Equipment :

1 வாணல்

தேவையான பொருட்கள் :

  • 1/2 கிலோ – இறால்
  • 1 டீ ஸ்பூன் – மஞ்சள் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் – மிளகாய் தூள்
  • 1 டீ ஸ்பூன் – பூண்டு,இஞ்சி விழுது
  • 7 பல் – பூண்டு
  • 1/2 டீ ஸ்பூன் – கடுகு
  • 20 – சின்ன வெங்காயம்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கறிவேப்பிலை தேவையான அளவு

செய்முறை :

முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்து நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து அதை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு வாணலை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம்,இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.

வெங்காயம் மற்றும் பூண்டு,இஞ்சி விழுது போட்டு வதக்க வேண்டும். அது நன்றாக வதங்கிய பிறகு ஒரு மணி நேரம் ஊற வைத்திருந்த இறாலை அதனுடன் சேர்த்து கொண்டு இறால் நன்கு வெந்ததும் அதனை சுருளும் அளவுக்கு நன்றாக வதக்க வேண்டும்.

இப்போது நமக்கு சுடசுட சுவையான இறால் வறுவல் தயார்.

செய்முறை குறிப்புகள் : Eral Varuval

இதனை தோசை, இட்லி, சப்பாத்தி, சாதம் மற்றும் தயிர் சாதம் என அனைத்திற்கும் போட்டு சாப்பிடலாம்.

Nutrition :

Serving: 400g | Carbohydrates: 94g | Calories: 371kcal | Protein: 2.2g

SUBSCRIBE ஆனந்தி சமையல் OFFICIAL CHANNEL CLICK HERE
சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவுகளையும் இங்கு காணலாம் –>ஆனந்தி சமையல்
கூகுள் நியூஸ் யில் ஆனந்தி சமையல் Follow பண்ணுங்க –>Google News
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்