Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

Garlic Chutney Easy Method : இட்லி, தோசைக்கு இந்த நான்கு பொருட்கள் இருந்தால் போதும் (10) பத்து நிமிடத்தில் அருமையான சட்னி செய்யலாம்… – 7

Published :
-விளம்பரம்-

Garlic Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் தோசை, இட்லி செய்யப்போகிறீர்களா?அந்த டிபனுக்கு 10 நிமிடத்தில் ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இட்லி, தோசை சாப்பிட சட்னியை விரும்புபவர்களை? அப்படியென்றால் இந்த நன்கு பொருட்கள் இருந்தால் போதும் அருமையான சுவையில் பூண்டு சட்னி தயார் செய்யலாம்.

Garlic Chutney Recipe In Tamil
Garlic Chutney Recipe In Tamil

இட்லி,தோசைக்கு பூண்டு சட்டினியானது அருமையான சைடு டிஷ்ஷாக இருப்பதோடு, உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பூண்டு சட்னி மிகவும் சிறந்தது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை பூண்டு கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.உணவுகளில் பூண்டுகளை அதிகம் சேர்ப்பதால் இதய நோயின் அபாயத்தை தடுக்கலாம்.

இரண்டு வகையான முறையில் பூண்டு சட்னியை செய்யலாம். அந்த 2 வகையான பூண்டு சட்னியை எப்படி செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த 2 விதமான பூண்டு சட்னியை எப்படி செய்வது என்பதை பற்றிய எளிய முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து செய்து சுவைத்து சுவை எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

  • 1 கப் துருவிய தேங்காய்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 10 பூண்டு பல்
  • 1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
  • உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள் : Garlic Chutney

  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • கொஞ்சம் கருவேப்பிலை

மற்றும் ஒரு பூண்டு சட்னிக்கு….

தேவையான பொருட்கள்:

  • 1 கப் தேங்காய் துருவியது
  • 6 பூண்டு பல்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

செய்முறை :

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்துக்கொள்ளவும். அதில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாய், பூண்டு சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடம் வரை வருக்கவேண்டும்.

பின்பு அதில் தேங்காய் துருவலை சேர்த்து மிதமான சூட்டில் 2 நிமிடம் நிறம் மாறும் வரை வறுத்து அதை இறக்கி வைத்து கொள்ளவேண்டும். பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களான வரமிளகாய், பூண்டு, தேங்காய் சேர்த்து, அதனுடன் உப்பு, புளி சேர்த்து சிறிது தண்ணீர் உற்றி நன்றாக அரைத்து அதனை ஒரு பௌலில் எடுத்து கொள்ளவேண்டும்.

பிறகு வாணலை அடுப்பில் வைத்து அதனுள் தாளிப்பதற்கு வைத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும் பின்பு அதில் உளுத்தம் பருப்பு, கடுகு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதை சட்னியுடன் கலந்து கிளறினால், சுவையுள்ள பூண்டு சட்னி தயார்.

Read Also : இந்த உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் விஷமாக மாறலாம்

மற்றொரு முறை பூண்டு சட்னி செய்வதற்கு ….

இந்த பூண்டு சட்னி செய்வதற்கு முதலில் மிக்சர் ஜாரில், வரமிளகாய், தேங்காய், பூண்டு தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவேண்டும்.

அரைத்த பின் அந்த சட்னியை ஒரு பௌலில் மாற்றி வைத்துக்கொள்ளவேண்டும்.
பின்பு வாணலை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு சேர்த்து தாளித்து அதை சட்னியுடன் சேர்த்தால் சுவையான பூண்டு சட்னி ரெடி.

Read Also : சுவையான திருமண வீட்டு நெய் சாதம் செய்வது எப்படி ?

-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்