Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

10 நிமிடத்தில் ருசியான ஓமப்பொடி செய்வது எப்படி..?

Published :
-விளம்பரம்-

How to make omapodi : ஸ்னாக்சில் மிகவும் பிரபலமானது ஓமப்பொடி. இது இந்தியாவில் அதிகமாக மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட கூடிய சிற்றுண்டியாக இருக்கிறது. இந்த ஓமப்பொடி மத்திய பிரதேசங்களில் தோன்றியது. இது மெல்ல மெல்ல இந்தியாவிற்கு வந்தது. ஓமப்பொடியின் சிறப்பு என்னவென்றால், இதை நம் வீட்டிலே செய்து சாப்பிடலாம்.

How to make omapodi
How to make omapodi

இதனை வாங்க கடைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அதுமட்டுமில்லாமல் இந்த ஓமப்பொடியை ஒரு முறை தயார் செய்து வைத்தால் 3 வாரங்களுக்கு பயன்படுத்தலாம். பிறகு, குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேட்கும் போது இதை எடுத்து கொடுக்கலாம். ஓகே வாருங்கள் மொறு மொறுன்னு ருசியான ஓமப்பொடி செய்வது பற்றி தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • 1 ஸ்பூன் – ஓமம்
  • 100 கிராம் – கடலை மாவு
  • 50 கிராம் – அரிசி மாவு
  • 1/4 ஸ்பூன் – மஞ்சள் தூள்
  • 1 சிட்டிகை – பெருங்காயத்தூள்
  • 1 ஸ்பூன் – வெண்ணெய்
  • தேவையான அளவு – உப்பு
  • 2 கொத்து – கருவேப்பிலை

செய்முறை: How to make omapodi

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஓமத்தைபோட்டு நன்கு அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் 1/2 கப் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு, ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், வெண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து கொள்ளுங்கள்.

இப்போது, சேர்த்துள்ள எல்லாம் பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு, இதில் வடிகட்டி வைத்துள்ள ஓமப்பொடி தண்ணீரை கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றி பிசைந்து கொள்ளுங்கள். அதாவது முறுக்கு மாவு பதம் அளவிற்கு பிசைந்து எடுத்து கொள்ளுங்கள்.

தயார் செய்து வைத்திருக்கும் மாவினை முறுக்கு அச்சில் அதாவது சின்ன துளை உள்ள அச்சில் வைத்து கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு வாணலை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.

எண்ணெய் மிதமான அளவு சூடானதும். அதில் அச்சில் இருக்கும் மாவினை வட்டமாக பிழிந்து விடுங்கள். மாவினை எண்ணெய்யில் பிழியும் போது கவனமுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

பிறகு இவை நன்கு சிவந்ததும் அதை திருப்பி போட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள். பிறகு, அதே எண்ணெயில் கருவேப்பிலை போட்டு பொரிய விட்டு எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள ஓமப்பொடியினை மிதமான சூட்டில் கையால் தூளாக்கி கொள்ளுங்கள். பிறகு இதில் பொறித்து வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டால் சுவையான ஓமப்பொடி தயார்..!

Read Also : சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்