Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

How to make sambar in Kerala style? Easy | கேரளா முறையில் சாம்பார் வைப்பது எப்படி ? – 09

Published :
-விளம்பரம்-

How to make sambar in Kerala style? : அன்பான நண்பர்களுக்கு எங்களின் அன்பான வணக்கம். நம் வி தமிழ் நியூஸ் பதிவின் மூலமாக பலதரமான சுவையான சமையல் குறிப்புகளை தெரிந்து உங்களுக்கு கொடுத்து வருகிறோம். அதேபோல் இந்த பதிவிலும் கேரளா முறையில் சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

How to make sambar in Kerala style?
How to make sambar in Kerala style?

பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் சாம்பாரும் ஒன்று. சைவ விருந்துகளில் முதலிடம் பிடிப்பது சாம்பார்,அதிலும் கேரளா சாம்பார், ஐயர் வீட்டு சாம்பார் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆகவே இந்த பதிவில் கேரளா முறை சாம்பார் எப்படி வைப்பது என்பதை பின்வரும் பகுதியில் விவரித்துள்ளோம். வீட்டில் ஒரே வகையான சுவையில் சாம்பார் செய்யாமல் கேரளா முறையில் சாம்பாரை வைத்து அசத்துங்கள்.

Watch Video : த்ரிஷாவின் டாப் பியூட்டி சீக்ரெட் இதுதான்..

How to make sambar in Kerala style Recipe?

தேவையான பொருட்கள்:

  • 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 1 – ஸ்பூன் கடுகு
  • 2 – பட்டை மிளகாய்
  • 1 – கப் துவரம் பருப்பு
  • 1 – கொத்து கருவேப்பிலை
  • 1 – டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 – டம்ளர் புளிக்கரைசல்
  • சிறிய துண்டு – பெருங்காயம்
  • 10 – சின்ன வெங்காயம்
  • 1 – முருங்கைக்காய்
  • 1 – கத்தரிக்காய்
  • 1 – தக்காளி
  • 1 – உருளைக்கிழங்கு
  • உப்பு

மசாலா பேஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்:

  • 1கைப்பிடி – தேங்காய் துருவல்
  • 1 கொத்து – கருவேப்பிலை
  • 2 ஸ்பூன் – தனியா
  • 1 – பெரிய வெங்காயம்
  • 1 ஸ்பூன் – கடலை பருப்பு
  • 8 – பட்டை மிளகாய்
  • 1 டீ ஸ்பூன் – மிளகு
  • 1 டீ ஸ்பூன் – சீரகம்
  • 1/2 டீ ஸ்பூன் – வெந்தையம்

ஸ்டெப் -1

முதலில் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளவும். இப்போது ஒரு வாணலை அடுப்பில் வைக்கவும் பின்பு அதில் தேங்காய் எண்ணெய் 1 டீ ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் – 2

எண்ணெய் சூடானதும் வெங்காயம் மற்றும் தேங்காய் துருவல் தவிர மற்ற அனைத்து மசாலா பொருட்களையும் சேர்த்து லேசாக வறுத்து கொள்ளுங்கள். பிறகு தேங்காய் துருவலை அதில் சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளுங்கள். அடுத்து கடைசியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டெப் -3

பிறகு இதை கொஞ்சம் நேரம் ஆறவைத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் மாதிரி அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் -4

இப்பொது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். இதில் கழுவி வைத்த துவரம் பருப்பு, பெருங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் – 5

நன்றாக துவரம் பருப்பு வெந்ததும் அதில் கத்தரிக்காய்,முருங்கைக்காய், நறுக்கிவைத்த தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் புளி கரைசல் சேர்த்து கொதிக்க வையுங்கள்.

ஸ்டெப் – 6

நன்றாக அனைத்து காய்கறிகள் வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி விடுங்கள்.

ஸ்டெப் -7

அடுத்து ஒரு வாணலில் 2 ஸ்பூன் தேங்காய் எண்னெய் ஊற்றி,அந்த எண்ணெய் சூடானதும் கடுகு, பட்ட மிளகாய் 2, 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து ஊற்றவும் ,நமக்கு சுவையான கேரளா தயார்..!

Read Also : சுவையான திருமண வீட்டு நெய் சாதம் செய்வது எப்படி ?

-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்