Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

தக்காளி தொக்கு சாதம் செய்வது எப்படி? ட்ரை பண்ணி பாருங்களேன் ! ஒரு பிடி சாதமும் மிச்சம் இருக்காது!

Published :
-விளம்பரம்-

தக்காளி தொக்கு இருந்தால் போதும் இரண்டு வாய் சோறு அதிகமாக தான் சாப்பிடுவோம். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் எப்போதும் செய்கிற தக்காளி தொக்கையே இப்போது நாம் வித்தியாசமாக பல நாட்கள் கெடாமல் இருக்க எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளப் போகிறோம்.

How to make tomato rice
How to make tomato rice

How to make tomato rice

தக்காளி உடம்புக்கு எவ்வளவு நல்லது என்று எல்லோருக்கும் தெரிந்தது தான். தக்காளியானது பல நோய்களுக்கு ஒரு நல்ல மருந்து. தக்காளி தொக்கு மிக மிக எளிமையாக வீட்டில் உள்ள சில பொருள்களை கொண்டு அருமையாக செய்யக் கூடிய ஒரு ரெசிபி இந்த தக்காளி தொக்கு.

தக்காளி சாதம் பல விதமான வகைகளில் செய்யப்படுவது உண்டு. தக்காளி சேர்த்து பிரியாணி போலவும் கிண்டுவது உண்டு. சாதாரணமாக தக்காளியை தொக்கு போல வதக்கி, அதில் சாதத்தை கொட்டி கிளறி வைப்பதும் உண்டு, இந்த முறையில் மிகவும் எளிமையாக அருமையான ருசியில் தக்காளி தொக்கு சாதம் செய்வது எப்படி? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

How to make tomato rice
How to make tomato rice

இதையும் படிங்க : முருங்கைக்காய் சாப்பிடுவதிலும் இவ்வளவு தீமைகள் இருக்கிறதா ..!

Equipment

  • கடாய் – 1

தேவையான பொருட்கள்:

  • வடித்த சோறு – 1 கிண்ணம்
  • தக்காளி – 2 நறுக்கியது
  • சின்ன வெங்காயம் – 10 நீளவாட்டில் நறுக்கியது
  • பச்சை மிளகாய் – 2 கீறியது
  • மஞ்சள் தூள் (சிறிதளவு )
  • கடுகு – 1/2 டீ ஸ்பூன்
  • உப்பு (தேவையான அளவு )
  • கடலை பருப்பு – 1 டீ ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1டீ ஸ்பூன்
  • கறிவேப்பிலை (சிறிதளவு )
  • கொத்தல்லி தழை (சிறிதளவு )
  • பெருங்காய பவுடர் (சிறிதளவு )
  • எண்ணெய் – 3 மே. கரண்டி

செய்முறை:

முதலில் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாணதும் கடுகு,க. பருப்பு, உ.பருப்பு, கறிவேப்பிலை போட்டு பொரிக்கவும்.

அதில் மிளகாய், வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும், பின்னர் பெருங்காயம் பவுடர் சேர்க்கவும். பின்பு அதில் தக்காளி சேர்த்து, சிறிது பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

நன்கு தக்காளி வதங்கி கறைந்ததும். சிறிது எண்ணெய், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு இளந் தீயில் இரண்டு நிமிடம் மூடிவைத்து, பின் கொத்தமல்லி தழை சேர்த்து இரக்கவும்.

இதில் ஒரு கிண்ணம் சாதம் சேர்த்து, நன்றாக கிளறவும், சூடாக பறிமாறவும் மீதமில்லாமல் சாப்பிடலாம், அருமையாகவும் சுவையாகவும் இருக்கும்.

இதையும் படிங்க :  சுவையான சைவ குருமா செய்வது எப்படி ?

Nutrition

Serving: 250g | Calories: 493kcal | Protein: 4.9g | Carbohydrates: 69g | Fat: 25g | Calcium: 32mg | Potassium: 432mg | Iron: 4.1mg | Sodium: 16mg.

-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்