Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

வடஇந்திய ஸ்பெஷல் சுவையான ஆலு பராத்தா இது போல் செய்து பாருங்க ! இதோட சுவை வேற லெவல்ல இருக்கும்.

Published :
-விளம்பரம்-

Aloo Paratha : பராத்தா வை சப்பாத்தி போன்று செய்யக்கூடிய ஒரு உணவு வகை, பராத்தாவை எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும். ஏனென்றால் பராத்தாக்களில் காய்கறிகளுடன் எதாவது ஒரு அசைவப்பொருளை சேர்த்து பராத்தாக்களை சப்பாத்தி போன்று சமையல் செய்வோம். அதனால பராத்தா அனைவர்க்கும் பிடித்த உணவுகளில் முதல் இடத்தில் வரும்.

பராத்தாக்களில் பலவகையான பராத்தாக்கள் இருக்கிறது. இப்படி பராத்தாக்கள் பலவகைகளில் இருந்தாலும் இப்போது நாம் செய்யப்போறது எல்லோருக்கும் மிகவும் புடிச்ச பராத்தா. இந்த ஆலு பராத்தாவினை எப்படி செய்வது என்று நாம தெருஞ்சிக்க போறோம்.இந்த பராத்தா செய்ய என்ன காய்கறிகள் பயன்படுத்தி செய்ய போறோம்னா உருளைக்கிழங்கு. அப்படினா உருளைக்கிழங்கு ஆலு பராத்தா செய்ய போகிறோம்.

Aloo Paratha
Aloo Paratha

இந்த உருளைக்கிழங்கு ஆலு பராத்தாவை சுவையாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த ருசியான ஆலு பராத்தாவை செய்து கொடுத்து சாப்பிட சொன்னால் எல்லோருக்குமே ரொம்ப பிடிக்கும். வீட்டில் இருக்கிற எல்லாருக்கும் இந்த ஆலு பராத்தாவை விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் இதில் உருளைக்கிழங்கு சேர்த்து செய்வதால் சுவையானது இன்னும் கூடுதலாக இருக்கும். அதனால இந்த ஆலு பராத்தாவை எப்படி செய்வது என்று நாம பார்க்கலாம்.

Try making North Indian special delicious aloo paratha

Equipment

  • தோசை கல்

தேவையான பொருட்கள் :

  • 1 கப் – கோதுமை மாவு
  • 3 – உருளைக்கிழங்கு
  • 1/2 ஸ்பூன் – மல்லித்தூள்
  • 1/2 ஸ்பூன் – மிளகாய்த்தூள்
  • 1/4 ஸ்பூன் – மஞ்சள் தூள்
  • 1/4 ஸ்பூன் – கரமசாலா
  • 1/4 ஸ்பூன் – ஓமம்
  • 1/4 ஸ்பூன் – சீரகத்தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி
  • உப்பு தேவையான அளவு

செய்முறை விளக்கம் :

முதலில் உருளைக்கிழங்கை நறுக்கி குக்கரில் தண்ணீர் ஊற்றி அதில் கிழங்கை போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.பிறகு அந்த உருளைக்கிழங்கின் தோலினை நீக்கி நன்றாக மசித்து கொள்ளவும். பிறகு அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பிறகு வேகவைத்துள்ள உருளைக்கிழங்கில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.பிறகு அதில் ஓமத்தை கசக்கி போடவும், பிறகு அத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையினை சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்பு உருளைக்கிழங்கில் கோதுமை மாவை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். தேவையானால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளலாம். பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டையாக எடுத்து பூரி தேய்க்கும் கல்லில் வைத்து தேய்த்து சப்பாத்திகளாக எடுத்துக்கொள்ளவும்.

Read Also : காரசாரமான சுவையில் பேச்சலர்ஸ் கார சட்னி இதுமாதிரி அரைச்சா ருசியில மயங்கிடுவீங்க!

பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை தோசைக்கல்லில் வைத்து மேலே லேசாக எண்ணெய் தடவி ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.

அனைத்து சப்பாத்திகளையும் போட்டு சுட்டு எடுத்து கொள்ளவும். இப்போது எல்லோருக்கும் பிடித்த ருசியான சுலபமான உருளைக்கிழங்கு பரோட்டா ரெடி. இதனை சூடாக பரிமாறினால் சுவையோ சுவையாக இருக்கும்.

Equipment :

Serving: 100g | Carbohydrates: 36g | Calories: 240kcal | Cholesterol: 25mg | Potassium: 104mg | Protein: 5.5g | Iron: 0.9mg | Fat: 4.1g

Watch Video : 2023 னின் தெற்காசிய பிரபலங்கள்…

-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்