Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

முட்டை இல்லாமல் ஆம்லெட் செய்வது எப்படி?

Published :
-விளம்பரம்-

Omelet without eggs : நண்பர்களே வணக்கம் ! முட்டையில் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் சாப்பாட்டிற்கு சைடிஸ் ஆக விரும்பி சாப்பிடுகிறார்கள். ஒரு சிலருக்கு முட்டையில் ஆம்லெட் சாப்பிட பிடிக்காது. அப்படி முட்டையில் ஆம்லெட் பிடிக்காதவர்களுக்கு இந்த சைவ ஆம்லெட் பிடிக்கும். ஒரு சிலர் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள். அதனால் நீங்கள் ஆம்லெட் சாப்பிட முடியவில்லை என்ற கவலையே வேண்டாம். இந்த பதிவில் வெஜ் ஆம்லெட் செய்வதை பற்றி தெரிந்து கொண்டு வீட்டில் செய்து சாப்பிடலாம் வாங்க!

Omelet without eggs
Omelet without eggs

சைவ ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்: Omelet without eggs

  • மஞ்சள் பாசி பருப்பு- 1 1/2 கப்
  • பச்சை மிளகாய்- 5
  • வெங்காயம்- 2
  • காய்ந்த மிளகாய்- 1/2
  • கேரட்- 1
  • மிளகு சீரகம்- 1 தேக்கரண்டி
  • பெருங்காயத் தூள்- 1/4 தேக்கரண்டி
  • இஞ்சி- தேவையான அளவு
  • சோடா உப்பு- தேவையான அளவு
  • கொத்தமல்லி– சிறிதளவு
  • உப்பு- தேவையான அளவு

செய்முறை:

முதலில் மஞ்சள் பாசி பருப்பை தண்ணீரில் ஊறவைத்து , அது ஊறியதும் தோல் இல்லாமல் அலசி வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும். அதன் பிறகு பச்சை மிளகாய், வெங்காயம், சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். அடுத்து கேரட்டை துருவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.

பிறகு, ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்து வைத்துள்ள பாசி பருப்புடன், நறுக்கிய பச்சை மிளகாய், அதோடு இஞ்சியினை சேர்த்து தண்ணீர் இல்லாமல் நன்கு அடை மாவு பதத்திற்கு அரைத்து அந்த மாவை எடுத்து தனி பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.

அரைத்து எடுத்து வைத்துள்ள அடை மாவுடன் துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை. காய்ந்த மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும். கலந்த மாவை 5 நிமிட நேரம் அப்படியே வைக்க வேண்டும்.

5 நிமிடங்கள் முடிந்ததும் அடுப்பை பற்ற வைத்து அதில் தோசை கல்லை வைத்து, கல் சூடானதும் கலந்து வைத்துள்ள மாவை ஆம்லெட் ஊற்றுவது போல தோசை கல்லில் ஊற்றவும். அடுப்பை மீடியம் தீயில் வைத்து அந்த ஆம்லெட் மேல தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஆம்லெட் வெந்தவுடன் சாப்பிட வேண்டியது தான், இப்போது நமக்கு அருமையான,சுவையான, சைவ ஆம்லெட் தயாராகி விட்டது.

Read Also : தித்திப்பான சேமியா பாயசம் செய்வது எப்படி?

-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்