Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

Easy Saiva kurma | சுவையான சைவ குருமா செய்வது எப்படி ? – 5

Published :
-விளம்பரம்-

Saiva kurma : நம்முடைய வீடுகளில் இட்லி, சப்பாத்தி, தோசை போன்ற உணவுகளுக்கு ஏதாவது ஒரு சட்னி அல்லது சாம்பார் வைத்து சாப்பிட்டு வருகிறோம். மேலும் புரோட்டா சாப்பிடுவதற்கும் சால்னா வைக்கவேண்டும்.

Saiva kurma
Saiva kurma

இதற்காகவே நாம் அனைவரும் வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிட்டு வருகிறோம். இதற்கு இன்றே ஒரு முடிவை கட்டிவிடலாம். ஆமாம் இன்று சுவையான சைவ குருமா செய்யப்போகிறோம். வீடுகளில் சண்டையாக இருக்கும் போது புரோட்டாவிற்கு அசைவ குருமாவை போட்டு சாப்பிடாமல் இருப்பார்கள். அதற்கு பதிலாக மிகவும் சுவையான சைவ சால்னா செய்வது எப்படி? தேவைக்குண்டான பொருட்கள் மற்றும் செய்யக்கூடிய செயல்முறை என அனைத்தையும் இந்த சமையல் பகுதியில் பார்க்கலாம் வாருங்கள்.

Equipment ஒரு வானால் , ஒரு மிக்ஸி

தேவைக்குண்டான பொருட்கள் | Saiva kurma

தேவையான காய்கறி வகைகள்

  • 2 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2 உருளைக்கிழங்கு நறுக்கியது
  • 2 தக்காளி பொடியாக நறுக்கியது
  • 3/4 கப் பச்சைப் பட்டாணி
  • 1 கேரட் நறுக்கியது
  • 8 to 10 பீன்ஸ் சிறியதாக நறுக்கியது .
  • 3/4 கப் காலிப்ளவர் சிறியதாக நறுக்கியது .

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

  • 1/4 கப் தேங்காய் துருவியது அல்லது நறுக்கியது
  • 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 12 முந்திரி
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு

சைவ குருமா செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • ஒரு பிரியாணி இலை
  • 1/2 டேபிள் ஸ்பூன் கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 3 பட்டை
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 அண்ணாச்சி பூ
  • 1 அல்லது 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • கொத்தமல்லி தழை சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு.

செய்முறை :

மசாலா அரைப்பது

ஒரு மிக்சியில் தேங்காய், பொட்டுக்கடலை, சோம்பு, முந்திரி அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மசாலா பதத்திற்கு அரைக்கவும். பின்பு அதை தனியாக எடுத்து வைக்கவும்.

Must Read : சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!

சைவ குருமா செய்யும் முறை :

முதலில் அடுப்பில் வாணலை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி அந்த எண்ணெய் சூடானதும் அதில் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி பூ, பட்டை சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து 1 முதல் 2 நிமிடம் வரை வதக்கவும். பிறகு அதில் தக்காளியை நறுக்கி சேர்த்து அதனுடன் தேவைக்கு ஏற்ற அளவு உப்பு சேர்த்து தக்காளி நன்றாக மென்மை ஆகும் வரை வதக்கவும்.

வதக்கிய பிறகு அதில் மிளகாய்த்தூள்,கொத்தமல்லி தழை,கரம் மசாலா சேர்த்து குறைவான தீயில் 1 முதல் 3 நிமிடங்கள் வரை வதக்கவும். மசாலா வாசனை வந்தவுடன் அதில் முதலில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கிளறவும். கிளறிய பிறகு அதனுடன் உருளைக்கிழங்கு,பீன்ஸ்,பச்சை பட்டாணி, கேரட், காலிப்ளவர் சேர்த்து நன்றாக கிளறவும். அதில் 1 முதல் 5 கப் அளவு தண்ணீர் சேர்த்து,அதில் தேவையான அளவில் உப்பு சேர்த்து குறைவான தீயில் காய்கறிகள் வேகும் வரை விடவும்.

காய்கறிகள் வெந்ததும் கொஞ்சம் எடுத்து சுவை பார்க்கவும். உப்பு தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும். பின்னர் அதில் கொத்தமல்லி தழைகளை தூவிவிடவும்.
இப்பொழுது சுவையான சைவ குருமா தயாராகிவிட்டது.

Must Watch : பருக்களை நீக்குவது எப்படி ?

Nutrition (ஊட்டச்சத்து )

Serving: 4PERSON | Fat: 2.9g | Carbohydrates: 4.5g | Vitamin C: 12.3mg | Vitamin A: 7.8IU

-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்