Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

சமையல் குறிப்பு – 3

Published :
-விளம்பரம்-

Samayal Tips Part 3 : மைசூர் பாக் செய்யும் போது, கடாயின் அடியில் ஒட்டி கொண்டு எடுக்கவே முடியாது. அதை சுரண்டாமல் மீண்டும் கடாயை அடுப்பில் வைத்து மிதமாக சூடு செய்து, லேசாக தேய்த்தால் ஒட்டி கொண்டுள்ளது எளிதாக வந்துவிடும்.

Samayal Tips Part 3
Samayal Tips Part 3

சாம்பாரில் உப்பு அதிகமானால் ஒரு முள்ளங்கியை சுத்தும் செய்து நறுக்கி சாம்பாரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். கூடுதலாக இருக்கும் உப்பின் சுவை குறைந்துபோகும்.

மைதா, கோதுமை மாவுகளை பயன்படுத்தி சப்பாத்தி, பூரி செய்யும் போது மாவு போதுமான அளவு இல்லையென்றால், உருளை கிழங்கை வேகவைத்து தோல் எடுத்துவிட்டு பிசைந்து மாவுடன் சேர்த்து பிசைந்து சப்பாத்தி, பூரி செய்யலாம்.

சப்பாத்தி மாவு சொத சொதப்பாக ஆகிவிட்டால், ஃப்ரீசரில் 1/2 மணி நேரம் வைத்தால் மாவு இறுகி விடும், பிறகு அதை எடுத்து உருட்டி சப்பாத்தி செய்யுங்கள் நன்றாக இருக்கும்.

இதையும் படிங்க : சுவையான தக்காளி குருமாவை செய்வது எப்படி?

இட்லி மாவில் உளுந்து போதாமல் கட்டியாக இருந்தால் பச்சை அப்பளத்தை தண்ணீரில் நனைத்து மிக்சியில் போட்டு அரைத்து மாவில் கலந்து கொள்ளுங்கள். இட்லி மென்மையாகவும். மிருதுவாகவும் இருக்கும்.

ஜாங்கிரிக்கு ஊற வைத்த உளுந்தை விழுதாக அரைத்து ஒரு கப் விழுதுக்கு அரிசிமாவு ஒரு டீஸ்பூன் கலந்து பிழிந்தால் ஜாங்கிரி உடையாமல் வரும்.

மிதமான வெந்நீரில் வெல்லத்தை கரைய செய்து, மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்தால். அப்பம் புஸ்ஸென உப்பி வரும்.

தட்டை முறுக்கை அரிசி மாவில் செய்வது போலவே ரவா, மைதா,கோதுமை மாவிலும் செய்யலாம்.

இட்லி மாவு அரைக்கும் போது உளுந்தை கொஞ்சம் குறைத்து, இளம் வெண்டைக்காய் நறுக்கி போட்டு ஊற வைத்து அரைத்தால் இட்லி பொசுபொசுவென இருக்கும்.

இதையும் படிங்க : தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மானசா சவுத்ரி…

-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்