Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

சமையல் குறிப்பு – 6

Published :
-விளம்பரம்-

Samayal Tips Part 6 : மோர் மிளகாய் தயார் செய்யும் போது அதனுடன் பாகற்காயை வில்லையாக நறுக்கி போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமாகவும் மிளகாய் கொஞ்சம் கசப்பாகவும் ருசி மாரி சுவையாக இருக்கும்.

அரிசி குருணையில் உப்புமா செய்யும் போது அது பாதி வெந்து கொண்டுள்ள போது, அதில் சம அளவில் வறுத்த சேமியாவை போட்டு வெந்ததும் இறக்கி அதில் அரை மூடி லெமனை பிழிந்து விடவும். இந்த 2 இன் 1 உப்புமா, புதுமையான ருசியாக இருக்கும்.

Samayal Tips Part 6
Samayal Tips Part 6

இட்லிக்கு ஊற்றி கொள்ளும் நல்லெண்ணையை லேசாக சூடு செய்து அதில் சிறிது கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து பயன்படுத்தினால் அதிகளவில் இட்லி சாப்பிட தோன்றும்.

கிரேவி வகைகள் செய்யும் போது கொஞ்சம் வேர்க்கடலையை தோல் நீக்கி நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைத்து கிரேவியில் சேர்த்தால் கிரேவி அருமையான சுவையாக இருக்கும்.

அரிசி அல்லது ஜவ்வரிசி கூழ் கிளறும் போது கசகசாவை பொடி செய்து போட்டு கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்து பொறுக்கும் போது தனி சுவையும், மனமும் இருக்கும்.

எந்த காய்கறியாக இருந்தாலும் அதை நறுக்கும் போது கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவி நறுக்குவது நல்லது. காய்கறிகள் நறுக்கி முடிந்ததும் சிகைக்காயை போட்டு கழுவி கொள்ளவும். விரல்கள் கறுத்து போகாமல் இருக்க இது பயன்படும்.

மைதாவை தண்ணீர் விட்டு பிசையாமல் அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் கொஞ்ச நேரம் வேகவைத்து தேவையான அளவு உப்பு, நெய்யும் சேர்த்து பிசைந்து முறுக்கு பிழியலாம். ருசியாக இருக்கும்.

இதையும் படிங்க : சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!

வடை, வடகம்,பஜ்ஜி செய்யும் போது எண்ணையில் ஒரு சிறிய துண்டு இஞ்சியை தட்டி போட்டு செய்தால் வயிற்றுக்கு நல்லது. பொறித்த உணவும் மணமுடன் இருக்கும்.

பர்ஃபி, மைசூர்பாகு ஆகிய இனிப்புகள் செய்யும் போது அவற்றின் மேலே வைக்கிற முந்திரி, பாதம், பிஸ்தா இவைகள் சரியாக ஒட்டிக்கொள்ளாமல் கீழே விழாமல் இருக்க நெய் தடவிய தட்டில் முதலில் இவைகளை தூவி பிறகு கலவையை இதன் மேல் கொட்டி ஆறவைத்து துண்டுகள் போட்டால் நன்றாக அதில் ஒட்டி கொள்ளும்.

Samayal Tips Part 6
Samayal Tips Part 6 | Samayal Tips Part 6

கோடை காலத்தில் எறும்புகள் வருவது அதிகம். உணவு பொருட்களை சமையல் மேடையில் வைக்கும் போது அவற்றை சுற்றி இடைவெளி விடாமல் மஞ்சள் தூள் தூவினால் எறும்புகள் ஓடிவிடும்.

குளோப் ஜாமுன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து இறக்கினால்,பாகு உரையாமலும் அதிக நேரம் கெடாமலும் இருக்கும். சுவையும் அதிகமாகும்.

சேப்பங்கிழங்கு வேகவைத்து தோல் உரித்த பின் அதை பிரிஜ்ஜில் 2,3 மணி நேரம் வைக்கவும்.பிறகு அதை எடுத்து பொரித்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக வரும் மற்றும் மொரமொரப்பாகவும் இருக்கும்.

வெயில் காலங்களில் மோர் சீக்கிரம் புளிப்பேறிவிடும் அப்படி புளிக்காமல் இருக்க அதில் வாழை இலையை சிறுசிறு துண்டுகளாக செய்து மோரில் போட்டால் புளித்துப்போகாது, மோரை பயன்படுத்தும் போது அதை எடுத்துவிடவும்.

இதையும் படிங்க : எப்படிப்பட்ட கண்திருஷ்டியாக இருந்தாலும் இதை மட்டும் ஒருமுறை செய்தால் உடனடியாக நீங்கிடும்..!

-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்