Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

காரசாரமான சுவையில் பேச்சலர்ஸ் கார சட்னி இதுமாதிரி அரைச்சா ருசியில மயங்கிடுவீங்க! ருசியோ ருசி !!!

Published :
-விளம்பரம்-

Kara Chutney : கார சட்னி உங்களுக்கு பிடிக்குமா? அதுவும் எளிமையாக காரா சட்னி செய்தால் இட்லி, தோசைக்கு அதிகமாக தொட்டு சாப்பிட நிறைய ஆட்கள் உள்ளார்கள். காரமா சாப்பிட வெகு பேருக்கு மிகவும் பிடிக்கும். அப்படி காரமாக சாப்பிட விரும்புபவர்களுக்கு மிகமிக ஸ்பெஷலான மிகவும் எளிமையான பேச்சுலர்ஸ் கார சட்னியினை இப்போ நாம செய்ய போகிறோம்.

நாம இளைமையோடு பேச்சுலர்ஸ் ஆக இருக்கும்போது கார உணவுகளை அதிகமாக சாப்பிடுவோம். அப்படி நமக்கு பிடித்த சட்னி கார சட்னியாகத்தான் இருக்கும். தோசைக்கோ அல்லது இட்லிகோ கார சட்னியை போட்டு சாப்பிடுவோம், சாப்பிடும்போது கண்ணில் தண்ணீர் வரும் அதையும் பொருட்படுத்தாமல் காரசட்னியினை போட்டு சாப்பிடுவோம் அந்த அளவுக்கு சுவையாக இருக்கும். இந்த கார ரொம்ப காரமா இருக்கப்போகிறது. காரசட்னி உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது இந்த பேச்சுலர்ஸ் கார சட்னி பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

Kara Chutney
Kara Chutney

அப்படி ஒரு காரமாக இருக்க போகிறது. நாம் செய்யும் காரச்சட்னியானது. தோசை, இட்லி சாப்பிடுவதற்கு சுவையினை கொடுப்பது சாம்பாரும், சட்னியுந்தான் அப்படி டேஸ்டாக சாப்பிடவேண்டுமெனில் பேச்சுலர்ஸ் கார சட்னியை வைத்து சாப்பிட்டு பாருங்கள்.நீங்கள் ருசியாகவும்,அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் உங்களுக்கு இந்த பேச்சுலர்ஸ் காரசட்னியால் தோன்றும், சரி சரி வாங்க இந்த பேச்சுலர்ஸ் காரச்சட்னி செய்வதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க!!!

இறால் வறுவல் எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்த முறை இப்படி செய்து பாருங்க விரும்பி சாப்பிடுவார்கள்!

Bachelor’s Kara Chutney

Equipment : Kara Chutney

1 வாணல்

தேவையான பொருட்கள்: Kara Chutney

  • 10 – காய்ந்த மிளகாய்
  • 15 – சின்ன வெங்காயம்
  • 15 – பூண்டு
  • 1 ஸ்பூன் – கடுகு
  • நெல்லிக்காய் சிறிதளவு
  • புளி சிறிதளவு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

முதலில் காய்ந்த மிளகாயின் காம்பை எடுத்துவிட்டு மிளகாயின் உள்ளே இருக்கும் விதைகளை வெளியில் எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் விதைகளை எடுத்த காய்ந்த மிளகாயை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.

மிளகாய் ஊறிய பின் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு கொஞ்சம் புளி சேர்த்து விழுது போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதில் பூண்டு, வெங்காயம் இவற்றை விழுது போல் அரைத்து கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு மற்றும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்தபின் முன்னதாக அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுதை சேர்த்து அதை நன்றாக கலந்து அதை கொதிக்கவிடவும்.

இந்த சட்னியானது லேசாக சூடானதும் நன்றாக கலந்து இறக்கி வைத்து கொள்ளவும். தோசை, இட்லி போட்டு சாப்பிட்டால் காரமாகவும் ருசியாகவும் காரமான வாசமான பேச்சுலர்ஸ் கார சட்னி ரெடி.

Nutrition: Kara Chutney

Serving: 100g | Carbohydrates: 13.91g | Calories: 29.93kcal | Sodium: 54.88mg | Protein: 3.49g | Calcium: 24.71mg | Potassium: 77.95mg | Iron: 0.21mg | Fiber: 1.27g

ஒத்த வார்த்தையினை கேட்டு தியேட்டரை விட்டு ஓடிய ரஜினி.. மறக்க முடியாத பின்னணி சம்பவம் தெரியுமா?

-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்