Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

மாலை வேளையில் 10 நிமிடத்தில் இந்த டீக்கடை ஆனியன் வடையை செய்து சாப்பிடுங்க.

Published :
-விளம்பரம்-

ஈவினிங் உங்கள் வீட்டில் இப்போர் காபி, டீ குடிக்கும் போது ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து தர சொல்லி கேட்கிறார்களா? அதுவும் வழக்கமாக செய்வது மாதிரி வடை, பஜ்ஜி செய்யாமல், கடைகளில் விற்பனையாவது போன்ற சுவையைக் கொண்ட ஸ்நாக்ஸ் செய்ய சொல்கிறார்களா?

இதுவரை நீங்கள் டீக்கடை ஆனியன் வடையை சாப்பிட்டிருக்கிறீர்களா? அந்த வடையின் ருசியே தனியாக இருக்கும். அந்த டீக்கடை ஆனியன் வடையை செய்து கொடுங்கள். நீங்கள் வழக்கமாக வெங்காய வடை செய்து தருவது போல் இல்லாமல், சற்று வித்தியாசமாகவும், அதே சமயம் ருசியாகவும் இருக்கும்.

Tea Kadai Vengaya Vadai Recipe In Tamil

உங்களுக்கு இந்த டீக்கடை வெங்காய வடையை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே டீக்கடை வெங்காய வடை ரெசிபியின் சுலபமான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப்பார்த்து படித்து அது போல செய்து சுவைத்து எப்படி இருந்தது என்பதை பற்றி எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

  • வெங்காயம் – 3
  • இஞ்சி – 2 இன்ச் (துருவியது)
  • பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)
  • சோம்பு தூள் – 1 டீஸ்பூன்
  • கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்
  • மைதா மாவு – 4 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
  • கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
  • உப்பு – 1 டீஸ்பூன்

இதையும் படிங்க : கொண்டைக்கடலை பிரியாணி எப்படி செய்வது தெரியுமா?

செய்முறை: Tea Kadai Vengaya Vadai Recipe In Tamil

முதலில் வெங்காயத்தை நீளவாட்டில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தை எடுத்து, அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து, 10 நிமிடம் நேரம் மூடி வைக்க வேண்டும்.

பின்பு அதில் சோம்பு தூள், கடலை மாவு, மைதா மாவு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து விட வேண்டும்.

முக்கியமாக இப்படி பிசையும் போது அதில் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். ஒருவேளை அதிக நீராக இருப்பதை உணர்ந்தால், அத்துடன் சிறிது கடலை மாவு மற்றும் மைதாமாவை சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.

இறுதியாக அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்கு போதுமான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ளதை கொஞ்சம் எடுத்து உருட்டி, அதை லேசாக தட்டி எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும், சுவையான டீக்கடை வெங்காய வடை ரெடி.

இதையும் படிங்க : Iniya Name Meaning in Tamil | இனியா பெயருக்கான விளக்கம்

-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்