Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

Easy Vendakkai Puli Kuzhambu | சுவைகொண்ட வெண்டை காய் புளி கொழம்பு தயார் செய்வது எவ்வாறு ?அதை செய்து பார்க்கலாம் வாருங்கள் …

Published :
-விளம்பரம்-

Vendakkai Puli Kuzhambu: நூறு கிராம் வெண்டை காயில் துத்தநாகம்,கால்சியம் போன்ற தாது சத்துக்களும்,வைட்டமின் சி,வைட்டமின் கே,வைட்டமின் இ சத்துக்களும் உள்ளது.வெண்டைக்காயில் இருக்கிற மெக்னீசியமானது மூளையில் உள்ள நெஃப்ரான் கட்டுகளுக்கு அதிகளவில் வலுவை சேர்க்கிறது. ஆகவேதான் வளரக்கூடிய குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறையாவது வெண்டைக்காயை சமையல் செய்து கொடுத்தால் மூளை வளர்ச்சியும்,நல்ல செயல் திறனும் அதிகரிக்கும்.

Vendakkai Puli Kuzhambu
Vendakkai Puli Kuzhambu

Equipment

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 மிக்ஸி
  • 1 கிண்ணம்

தேவையான மூல பொருட்கள்

  • 12 வெண்டைக்காய்
  • 6 பல் பூண்டு
  • 10 சின்ன வெங்காயம்
  • 5 டேபிள் ஸ்பூன் புளி சாறு
  • தேவையான அளவு உப்பு
  • தாளிக்க தேவையான பொருட்கள்
  • 1 டேபிள் ஸ்பூன் கடுகு
  • 2 மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • தேவைக்கு கருவேப்பிலை

அரைக்க தேவையான பொருட்கள்

  • 4 மிளகாய்
  • 1/2 கப் தேங்காய் துருவியது
  • 2 டேபிள் ஸ்பூன் மல்லி 5 டேபிள் ஸ்பூன் புளி கொழம்பு மசாலா

Read Also : சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

செய்முறை | Vendakkai Puli Kuzhambu

முதலில் அடுப்பில் ஒரு வானலை வைக்கவும், அதில் 3 டீ ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும் அந்த எண்ணெய் சூடேறும் வரை காத்திருந்து, சூடேறியதும் தாளிப்பதற்காக வைத்துள்ள பொருட்களான உளுத்தம் பருப்பு, கடுகு, மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளுங்கள்.

பின்னர் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும் பொன்னிறமாக வெங்காயம் வரும் வரையில் வதக்கி கொள்ளுங்கள்.பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளியில் பச்சை வாடை போய் மென்மையாக வரும்வரை வதக்கி கொள்ளவும். அதன் பிறகு நாம் எடுத்து வைத்துள்ள வெண்டைக்காயை தேவைக்கு ஏற்றவாறு நறுக்கி 6 அல்லது 10 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். பிறகு இதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கிற தேங்காயினை சேர்க்கவும்.

தேங்காய் பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ளவும். பின்னர் தேவைக்கு ஏற்ப உப்பினை சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்,பிறகு தயார் நிலையில் ஊற வைத்துள்ள புளியை கரைத்து புளி சாறினை ஊற்றுங்கள். பின்பு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொண்டு நன்றாக கொதிக்க விடவும். குழம்பு நல்ல பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும். இப்பொழுது சுவைமிக்க வெண்டைக்காய் புளிக்கொழம்பு தயாராகிவிட்டது.

Watch Video : முகத்துல எண்ணெய் வடியுதா..

ஊட்டச்சத்து (Nutrition)

Serving: 4person | Carbohydrates: 7g | Calories: 33kcal | Potassium: 299mg | Calories: 33kcal

-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்